Sunday, February 14, 2016

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை!

ராமநாதபுரம் அரசு உதவிபெறும் ராஜா மேல்நிலைப்பள்ளியில், 7 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுத தடை விதித்தனர். 

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு படிக்கின்றனர். அரசு தேர்வு எழுதுவதற்கான மாணவர்கள் பட்டியல் சில தினங்களுக்கு முன் தேர்வுகள் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பினர்.
அதில் முதுநாளைச் சேர்ந்த கணபதி மகன் சரவணக்குமார்பனையூர் இருளப்பன் மகன் இனியராஜ்,முதலுார் விஸ்வநாதன் மகன் கர்ணன்கலையூர் வேலு மகள் ஜோதிகாமூர்த்தி மகள் மூவிதா,ராமராஜ் மகன் ராஜசிங்கம்சேகர் மகள் ராணி ஆகிய 7 மாணவர்களின் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கேட்டதற்குஅடுத்தாண்டு தேர்வு எழுதி கொள்ளலாம் என,பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
ஆத்திரமடைந்த பெற்றோர்சமூக ஆர்வலர் ராஜூ தலைமையில் நேற்று முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணுவிடம் புகார் கொடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர்மாவட்டக் கல்வி அலுவலர் உசேன்கான் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். பின் மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது: விசாரணையில் மாணவர்களை தேர்வு எழுத விடாதது தெரியவந்தது. அது தவறு தான். இயக்குனரிடம் பேசிவிட்டோம். விடுப்பட்ட மாணவர்களின் பெயரையும் பட்டியலில் சேர்த்து அனுப்புமாறு தெரிவித்தார்.
விரைவில் புது பட்டியல் தயாரித்து அனுப்ப தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளோம். 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை தேர்வு எழுதவிடாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

No comments:

Post a Comment