Tuesday, December 15, 2015

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?


வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார். இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக
பாதிப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பலரது புத்தகங்கள் மழையில் நனைந்து, சிதைந்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக் கூடாது . நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவின் அடிப்படையில் இந்த கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரித்து, அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள்


தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Saturday, December 12, 2015

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, December 10, 2015

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு


நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம் கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.
திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 18, 2015

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.


அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கோவையில், 346 ஆசிரியர்கள் பங்ககேற்றனர். பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் தவிர்த்த பிற பாடங்களை கையாளும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக கற்பித்தல் முறை பயிற்சிகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இதில், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்கள், பங்கேற்றுள்ளனர். ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு புரியும் படி எளிமையாக கற்பித்தல் குறித்து கருத்தாளர்கள் நேற்று பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, இன்றும், நாளையும் பயிற்சிகள் நடக்கவுள்ளது. ஆங்கில பாடத்திற்கான பயிற்சிகளுக்கு மட்டும், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 3 கோடியே 67 லட்சத்து, 80 ஆயிரத்து, 800 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதே போல், அடுத்தடுத்த கட்டங்களாக கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறவுள்ளது; 14 ஆயிரத்து 530 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ள கணித பயிற்சி வகுப்புகளுக்கு, 3 கோடியே 67 லட்சம் ரூபாயும், 12 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ள சமூக அறிவியல் பாடத்திற்கு, 2 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரத்து 600 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், நான்கு மையங்களில் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நடந்தது. இதில், 396 ஆசிரியர் கள் பங்கேற்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கருத்தாளர்களாக பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமைவகித்து பயிற்சிகளை துவக்கி வைத் தார். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அலுவலர் முத்து மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

Wednesday, August 5, 2015

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சில தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு, உடனடி துணைத் தேர்வு நடத்தப்பட்டது.தற்போது, அனைத்து தேர்வு முடிவுகளும் வெளிவந்து, மேல்நிலை மற்றும் தொழிற்கல்விக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் மறு கூட்டல், மறு மதிப்பீடு, துணைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், திருத்தப்பட்ட அசல் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுத் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Thursday, July 30, 2015

10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழு விவரங்களையும் பள்ளி அளவில் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர்(பொறுப்பு) வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நிகழாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் பற்றிய முழுவிவரங்கள் தயாரிக்கும் பணி அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கு முன்பு வரையில் மாணவ, மாணவிகளின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் மட்டும் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. அதிலும், தகப்பனாரின் முதல் எழுத்து மற்றும் பிறந்த தேதி ஆகியவை தவறாக குறிப்பிடவும் நேர்ந்தது.
எனவே இதுபோன்ற தவறுகளை தவிர்க்கும் வகையில், தற்போது கூடுதல் விவரங்களுடன் தயார் செய்யப்பட இருக்கிறது. இத்தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழுவிவரங்களையும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட இருக்கிறது. இதில், 10ம் வகுப்பு படித்து வருகிறவர்களின் பெயர், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் விவரம், மதம், இனம், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விவரம், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும. ஆதார் எண் இல்லாதவர்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இப்பணியை இம்மாதம் 30ம் தேதி தொடங்கி, ஆக.30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் பூர்த்தி செய்ததை, தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்து விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில், 2016ல் தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் கட்டாயம் 14 வயதை பூர்த்தி அடைந்தவராக வேண்டும். இதை குறிப்பிட்ட நாள்களுக்குள் தயார் செய்து அதன் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம், தேர்வு துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, June 27, 2015

உடனடித் தேர்வு: தேர்வர்கள் அலைக்கழிப்பா?


பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இதற்கு கல்வித் துறையினர் உரிய விளக்கத்தை அளித்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வின்போது தேர்வு மைய நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட தேர்வு மையத்துக்குச் சென்ற தேர்வர்களுக்கு, மையம் மாற்றியமைக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. இதனால், உரிய மையத்தை தேடி அலைந்து தேர்வர்கள் காலதாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலர் வேதாசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:உடனடித் தேர்வு புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட இருந்தது. அங்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால், அந்தப் பள்ளியில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டது.
இருப்பினும், 7 மாணவர்களுக்கு மட்டும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி எனக் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் தாமதம் ஆனதால், கூடுதலாக நேரம் அளிக்கப்பட்டது.ஒருவருக்கு மதுராந்தகத்தில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டது. அவர் பல்லாவரத்தில் இருந்து தேர்வு மையத்துக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றதால், அனுமதிக்கப்படவில்லை. அவர் செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு வந்து, தன்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறியதால் தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Friday, June 12, 2015

பத்தாம் வகுப்பு: 18, 19-இல் அறிவியல் செய்முறைத் தேர்வு


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:
கடந்த மார்ச் 2015-இல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு வருகை புரிந்து ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு வரும் ஜூன் 18,19-ஆம் தேதிகளில் சிறப்புத் துணைத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறும்.
இதுகுறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Thursday, June 11, 2015

10ம் வகுப்பு செய்முறை வகுப்புக்கு பதிவுப்பணி


பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும், 2015-16ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.பதிவு பணிகள் முடிந்த பின், மாவட்ட கல்வி அலுவலரால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தமையங்களுக்கு தொடர்ந்து சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில், 80 சதவீத வருகை பதிவு இருக்கவேண்டியது கட்டாயம். இதற்கான விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Wednesday, May 13, 2015

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி


பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். 2006-07ம் ஆண்டு 1ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் முதன் முதலாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்பாடத்தை பகுதி 1ல் கட்டாயமாக எழுத வேண்டும்.பகுதி 1ல் தமிழ்மொழி பாடம் தவிர பிற மொழியை பயின்று வந்த மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் பகுதி 1ல் தமிழ்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டால் அதற்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும், பள்ளி தாளாளரும் பொறுப்பேற்க வேண்டும். வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1ல் தமிழ் மொழி தேர்வு நடத்தப்படும். பிற மொழிகளில் எழுத முடியாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, April 5, 2015

10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடையில் குழப்பம்
பத்தாம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், இரண்டு கேள்விகளில் குழப்பமான பதில்கொடுத்துள்ளதால், கருணை மதிப்பெண் வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்ணுக்கான, முதல் கேள்வியில், இரண்டு விடைகள் குழப்பமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இக்கேள்வியில், 'தாஜ்மகால்' குறித்து, ஒரு பத்தி கொடுக்கப்பட்டு,அதில் உள்ள, ஐந்து வார்த்தைகளுக்கு இணையான, ஆங்கில சொற்களை தேர்வு செய்ய குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும், நான்கு விடைகள் தரப்பட்டு, அதில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.அந்த வகையில்,' 'glory'என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான, நான்கு வார்த்தைகளில், இரண்டு பொருத்தமான வார்த்தைகள் தரப்பட்டுள்ளன.
அதாவது,''beauty,splendour 'என்றஅந்த, இரண்டு சொற்களில், இரண்டுமே, கிட்டத்தட்ட சரியான விடையே என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, இரு வார்த்தைகளில் எதை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்று, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல்,'jostled'என்ற வார்த்தைக்கு இணையான சொல் பட்டியலில், ''pushed roughly,quarrelled 'ஆகிய, இரண்டு சரியான சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சரியான விடையாக,'pushed roughly'என்றாலும்,பள்ளிக்கல்வித் துறை வழங்கிய வினா வங்கியில்,'quarrelled'என்ற வார்த்தையே விடையாக தரப்பட்டுள்ளது. அதனால், இதிலும், இரண்டில் எந்த விடை எழுதினாலும் அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, March 27, 2015

ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
திண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.
பி.டி.சரண்தேவ், வேலன்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பழநி: இரண்டு மதிப்பெண் 7 கேள்விகளும் எளிதாக இருந்தது. கேள்விகள் தெளிவாக இருந்ததால் பதட்டம் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஐந்து மதிப்பெண் கேள்விகள் புத்தக பயிற்சி பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.
கே.ஷாலினி, பாரத்வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, பழநி: ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒன்றிரண்டு இலக்கண கேள்வி கடினமாக இருந்தது. 2 , 5 மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.
பி.எல்.அழகுமீனாள், ஆசிரியர், புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: குழப்பமின்றி நேரடியாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. புத்தக பயிற்சி வினாக்கள் அதிகளவில் வந்தன. இலக்கண வினாக்கள் எளிதாக இருந்ததால் 20 மதிப்பெண்களை அப்படியே எடுக்கலாம். அதிக மாணவர்கள் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சுமார் மாணவர் கூட 80 முதல் 90 மதிப்பெண்கள் பெறலாம்.
'ஆங்கிலம் முதல்தாள் எளிது': 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து
திண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.
பி.டி.சரண்தேவ், வேலன்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பழநி: இரண்டு மதிப்பெண் 7 கேள்விகளும் எளிதாக இருந்தது. கேள்விகள் தெளிவாக இருந்ததால் பதட்டம் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஐந்து மதிப்பெண் கேள்விகள் புத்தக பயிற்சி பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.
கே.ஷாலினி, பாரத்வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, பழநி: ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒன்றிரண்டு இலக்கண கேள்வி கடினமாக இருந்தது. 2 , 5 மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.
பி.எல்.அழகுமீனாள், ஆசிரியர், புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: குழப்பமின்றி நேரடியாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. புத்தக பயிற்சி வினாக்கள் அதிகளவில் வந்தன. இலக்கண வினாக்கள் எளிதாக இருந்ததால் 20 மதிப்பெண்களை அப்படியே எடுக்கலாம். அதிக மாணவர்கள் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சுமார் மாணவர் கூட 80 முதல் 90 மதிப்பெண்கள் பெறலாம்.
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாளில் ஒரு மதிப்பெண் கேள்வி, பாடத்திட்டத்திற்கு வெளியே கேட்கப்பட்டுள்ளது மாணவ–மாணவிகள் கருத்து
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒருகேள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளது என்று மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழ் 2–வது தாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 19–ந்தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று தமிழ் 2–வது தாள் தேர்வு நடைபெற்றது.
தேர்வு பகல் 12 மணிக்கு முடிந்தது. அதன் பின்னர் மாணவர்கள் வெளியே வந்தனர். சென்னை எழும்பூரில் உள்ளமாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலரிடம் தேர்வு எப்படி இருந்தது? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து....
தமிழ் 2–வது தாள் தேர்வு எளிதாக இருந்தது. ஆனால் 20–வது கேள்வியான ‘தொகை சொல்லை விரித்தெழுதுக– நாற்படை’ என்பது ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது. அந்த வினாவுக்கு உரிய பதில் புத்தகத்தில் இல்லாதது. அதாவது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து அந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதனால் அந்த கேள்வியை வாசித்ததும் குழப்பமாக இருந்தது. என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.
மேலும் 2 கேள்விகள் பாடத்திற்கு பின்னால் இருந்து கேட்கப்படவில்லை. அந்த வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளன. நன்றாக பாடத்தை புரிந்து படித்தவர்களுக்கு எழுதத்தெரிந்து இருக்கும். பாடத்தின் பின் பக்கத்தில் கொடுத்த வினாக்களுக்கு உரிய விடைகளை மட்டும் படித்தவர்கள் நாங்கள். அதனால் அந்த 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. சில மாணவிகள் பதில் அளித்துள்ளனர்.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
இதே கருத்தைத்தான் அந்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிய பிற பள்ளிக்கூடத்தை சேர்ந்த சில மாணவர்களும் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.ஆங்கிலம் முதல் தாளில்3 கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன மாணவிகள் கருத்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த 19-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. நேற்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்று பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் கூறியதாவது:-
ஆங்கிலம் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் பல, ஏற்கனவே கடந்த வருடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளே ஆகும். இந்த கேள்விகளை கொண்டு எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதனால் எளிதாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் 19, 21, 22 ஆகிய 3 கேள்விகள் புத்தகத்தில் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன. அந்த 3 கேள்விகளும் தலா 1 மதிப்பெண்ணுக்கு உரியது.
மேலும் 40-வது கேள்வி புத்தகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல வினாத்தாளில் முதல் பக்கத்தில், ஒரே சொல்லுக்கு இணையான (சினானிம்ஸ்) சொல் கேட்டு ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், சில கேள்விகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடியான கேள்விகளாகவும், நகர்ப்புற மெட்ரிக் மாணவர்களுக்கு எளிமையாகவும் இருந்தன. தேர்வில், நான்கு மாணவர் உட்பட, 74 பேர் முறைகேட்டில் சிக்கினர்.
பாடப் புத்தகத்தில்:
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 53 வினாக்கள் தரப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்தும், பாடத் திட்டத்தின் படி மாற்றியும் கேட்கப்பட்டிருந்தன. ஐந்தாவது வினாவில், 'சி.ஓ.டி., - காட்' என்ற பிரிட்டிஷ் ஆங்கில சொல்லுக்கு, இணையான அமெரிக்கன் ஆங்கில சொல் கேட்கப்பட்டிருந்தது. இதை கிராமப்புறமாணவர்களால் சரியாக எழுத முடியவில்லை. இதேபோல், 19, 20, 21, 22, 42 மற்றும், 43வது கேள்விகள், மாணவர்களுக்கு குழப்பமாக இருந்தன. மேலும்,'இடம் பெற்றுள்ள பிழைகளை சரி செய்' என்ற, 52வது வினாவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. மெட்ரிக் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி கற்றுள்ளதால், அவர்களுக்கு எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், 53வது வினாவில், போக்குவரத்து விதிமீறல் குறித்து படம் ஒன்றைக் கொடுத்து, ஐந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒரு கேள்வியில், எத்தனை வகை வாகனங்கள் படத்தில்தெரிகிறது என, கேட்கப்பட்டிருந்தது. படத்தில் கார், ஆட்டோ, மோட்டார் பைக் மற்றும் மொபட் வகை வாகனங்கள் இருந்தன.
மதிப்பெண் தர வேண்டும்:
விடையில், இருசக்கர வாகனத்தின் இரு வகைகளும் குறிப்பிட வேண்டுமா அல்லது அனைத்தை யும் ஒரே வகையாக குறிப்பிட வேண்டுமா என்ற குழப்பம் இருந்ததாகவும், இதில் எப்படி குறிப்பிட்டாலும் மதிப்பெண் தர வேண்டும் என்றும், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தேர்வில், 74 பேர் காப்பியடித்து பிடிபட்டனர். நான்கு பேர் மாணவர்; 70 பேர் தனித்தேர்வர்கள். அதிகபட்சமாக கடலூரில், 43 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.

Monday, March 9, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட உள்ள விடைத்தாள்களில் முகப்புத்தாள்கள் இணைக்கும் பணி தொடங்கியது.
இது குறித்து தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11827 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ மாணவியர் எழுத உள்ளனர். இதையடுத்து அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான விடைத்தாள்கள் 3298 தேர்வு மையங்கள் உள்ள மாவட் டங்களுக்கு தேர்வுத் துறை கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் விடைத்தாள்கள் தைக்கும் பணி தொடங்கியுள்ளது. விடைத்தாளின் முதன்மை விடைத்தாளில் தற்போது முகப்பு தாள் இணைக்கும் பணியை தொடங்க தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாளில் முகப்புத்தாள்கள் முதன்மை விடைத்தாளுடன் தைக்கும் பணியை 7ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும். முகப்பு தாள்களை முதன்மைத் தாளுடன் இணை த்து தைக்கும் போது அந்தந்த பாடத்துக்குரிய முதன்மை விடைத்தாளுடன் தைக்க வேண்டும். இதன்படி பத்தாம் வகுப்பு மொழித்தாள் என்று உள்ளவற்றில் மொழித்தாள் 1, ஆங்கிலம் 1, ஆங்கிலம் 2 ஆகிய முகப்புத்தாள்களை தைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் 2க்கு அதற்குரிய தமிழ் 2 முகப்பு தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற மொழிப்பாடங்களான இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு போன்றவற்றின் இரண்டாம் தாள் பாடத்துக்கு வரிசை எண் 1ல் காணும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட விடைத்தாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு கணக்கு, அறிவியல் பாடங்களில் கணக்கு பாடத்துக்கு கிராப் ஷீட்டை 28 மற்றும் 29ம் பக்கங்களுக்கு இடையே இணைத்து தைக்க வேண்டும்.
* முகப்புத் தாளில் மீடியம்(பாட வழி) தவறாக இருந்தால் சிவப்பு நிற மையால் திருத்தம் செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
* முகப்பு தாளில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் தவறாக இருந்தாலோ, பள்ளியின் பெயர் திருத்தம் இருந்தால் அவற்றை சிவப்பு மையால் திருத்தம் செய்து மேற்கண்ட படி ஒப்புதல் பெற வேண்டும்.
* தேர்வு மைய எண் மற்றும் பெயரில் திருத்தம் இருந்தாலோ, முகப்புத்தாளில் பார்கோடு உள்பட சேதம் அடைந்திருந்தாலோ, முகப்பு தாள் பெறப்படவில்லை என்றாலோ, பாடக் குறியீட்டு எண் மற்றும் பாடம் மாறி இருந்தால் தேர்வுத் துறை அறிவித்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்.uமாணவரின் போட்டோ முகப்பு தாளில் மாறியிருந்தால் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், உரிய பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் போட்டோவை ஒட்டி சான்றொப்பம் செய்ய வேண்டும், தனித் தேர்வராக இருந்தால் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரே மாணவரின் போட்டோவை ஒட்டி சான்றொப்பம் இட வேண்டும். - See more at: http://m.dinakaran.com/detail.asp…

Saturday, March 7, 2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்(தத்கல்) விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்வை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மார்ச் 7-ஆம் தேதி முதல் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம். மார்ச் 11-இல் செய்முறைத் தேர்வு: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு மார்ச் 11-ஆம் தேதியன்று அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் தாங்கள் ஏற்கெனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ஹால் டிக்கெட், செய்முறைத் தேர்வு குறித்து இந்தத் தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 5, 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டதுஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
தேர்வை சிறப்பான முறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வர்கள் ஆகியோர் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே விடைத்தாள் அனுப்பும் பணி முடிவடைந்துவிட்டது.
அதுபோல விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. முகப்பு சீட்டில் மாணவரின் தேர்வு எண், அவரது புகைப்படம், ரகசிய கோடு நம்பர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த முகப்பு சீட்டை தனியாக தேர்வுத்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பும் பணியில் உள்ளது. சில மாவட்டங்களுக்கு முகப்பு சீட்டு அனுப்பப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இவை தேர்வு மையங்களுக்கு போய்ச்சேர்ந்த பின்னர் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் நூலைக்கொண்டு விடைத்தாளின் முன் பக்கத்தில் வைத்து முகப்பு சீட்டை தைப்பார்கள்.
அதேபோலத்தான் வினாத்தாளும் அனுப்பப்படும். அவை முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பிலும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் காவலிலும் இருக்கும்.