Friday, March 27, 2015

ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
திண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.
பி.டி.சரண்தேவ், வேலன்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பழநி: இரண்டு மதிப்பெண் 7 கேள்விகளும் எளிதாக இருந்தது. கேள்விகள் தெளிவாக இருந்ததால் பதட்டம் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஐந்து மதிப்பெண் கேள்விகள் புத்தக பயிற்சி பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.
கே.ஷாலினி, பாரத்வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, பழநி: ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒன்றிரண்டு இலக்கண கேள்வி கடினமாக இருந்தது. 2 , 5 மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.
பி.எல்.அழகுமீனாள், ஆசிரியர், புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: குழப்பமின்றி நேரடியாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. புத்தக பயிற்சி வினாக்கள் அதிகளவில் வந்தன. இலக்கண வினாக்கள் எளிதாக இருந்ததால் 20 மதிப்பெண்களை அப்படியே எடுக்கலாம். அதிக மாணவர்கள் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சுமார் மாணவர் கூட 80 முதல் 90 மதிப்பெண்கள் பெறலாம்.
'ஆங்கிலம் முதல்தாள் எளிது': 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து
திண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.
பி.டி.சரண்தேவ், வேலன்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பழநி: இரண்டு மதிப்பெண் 7 கேள்விகளும் எளிதாக இருந்தது. கேள்விகள் தெளிவாக இருந்ததால் பதட்டம் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஐந்து மதிப்பெண் கேள்விகள் புத்தக பயிற்சி பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.
கே.ஷாலினி, பாரத்வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, பழநி: ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒன்றிரண்டு இலக்கண கேள்வி கடினமாக இருந்தது. 2 , 5 மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.
பி.எல்.அழகுமீனாள், ஆசிரியர், புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: குழப்பமின்றி நேரடியாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. புத்தக பயிற்சி வினாக்கள் அதிகளவில் வந்தன. இலக்கண வினாக்கள் எளிதாக இருந்ததால் 20 மதிப்பெண்களை அப்படியே எடுக்கலாம். அதிக மாணவர்கள் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சுமார் மாணவர் கூட 80 முதல் 90 மதிப்பெண்கள் பெறலாம்.
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாளில் ஒரு மதிப்பெண் கேள்வி, பாடத்திட்டத்திற்கு வெளியே கேட்கப்பட்டுள்ளது மாணவ–மாணவிகள் கருத்து
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒருகேள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளது என்று மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழ் 2–வது தாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 19–ந்தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று தமிழ் 2–வது தாள் தேர்வு நடைபெற்றது.
தேர்வு பகல் 12 மணிக்கு முடிந்தது. அதன் பின்னர் மாணவர்கள் வெளியே வந்தனர். சென்னை எழும்பூரில் உள்ளமாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலரிடம் தேர்வு எப்படி இருந்தது? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து....
தமிழ் 2–வது தாள் தேர்வு எளிதாக இருந்தது. ஆனால் 20–வது கேள்வியான ‘தொகை சொல்லை விரித்தெழுதுக– நாற்படை’ என்பது ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது. அந்த வினாவுக்கு உரிய பதில் புத்தகத்தில் இல்லாதது. அதாவது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து அந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதனால் அந்த கேள்வியை வாசித்ததும் குழப்பமாக இருந்தது. என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.
மேலும் 2 கேள்விகள் பாடத்திற்கு பின்னால் இருந்து கேட்கப்படவில்லை. அந்த வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளன. நன்றாக பாடத்தை புரிந்து படித்தவர்களுக்கு எழுதத்தெரிந்து இருக்கும். பாடத்தின் பின் பக்கத்தில் கொடுத்த வினாக்களுக்கு உரிய விடைகளை மட்டும் படித்தவர்கள் நாங்கள். அதனால் அந்த 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. சில மாணவிகள் பதில் அளித்துள்ளனர்.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
இதே கருத்தைத்தான் அந்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிய பிற பள்ளிக்கூடத்தை சேர்ந்த சில மாணவர்களும் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.ஆங்கிலம் முதல் தாளில்3 கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன மாணவிகள் கருத்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த 19-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. நேற்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்று பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் கூறியதாவது:-
ஆங்கிலம் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் பல, ஏற்கனவே கடந்த வருடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளே ஆகும். இந்த கேள்விகளை கொண்டு எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதனால் எளிதாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் 19, 21, 22 ஆகிய 3 கேள்விகள் புத்தகத்தில் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன. அந்த 3 கேள்விகளும் தலா 1 மதிப்பெண்ணுக்கு உரியது.
மேலும் 40-வது கேள்வி புத்தகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல வினாத்தாளில் முதல் பக்கத்தில், ஒரே சொல்லுக்கு இணையான (சினானிம்ஸ்) சொல் கேட்டு ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், சில கேள்விகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடியான கேள்விகளாகவும், நகர்ப்புற மெட்ரிக் மாணவர்களுக்கு எளிமையாகவும் இருந்தன. தேர்வில், நான்கு மாணவர் உட்பட, 74 பேர் முறைகேட்டில் சிக்கினர்.
பாடப் புத்தகத்தில்:
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 53 வினாக்கள் தரப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்தும், பாடத் திட்டத்தின் படி மாற்றியும் கேட்கப்பட்டிருந்தன. ஐந்தாவது வினாவில், 'சி.ஓ.டி., - காட்' என்ற பிரிட்டிஷ் ஆங்கில சொல்லுக்கு, இணையான அமெரிக்கன் ஆங்கில சொல் கேட்கப்பட்டிருந்தது. இதை கிராமப்புறமாணவர்களால் சரியாக எழுத முடியவில்லை. இதேபோல், 19, 20, 21, 22, 42 மற்றும், 43வது கேள்விகள், மாணவர்களுக்கு குழப்பமாக இருந்தன. மேலும்,'இடம் பெற்றுள்ள பிழைகளை சரி செய்' என்ற, 52வது வினாவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. மெட்ரிக் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி கற்றுள்ளதால், அவர்களுக்கு எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், 53வது வினாவில், போக்குவரத்து விதிமீறல் குறித்து படம் ஒன்றைக் கொடுத்து, ஐந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒரு கேள்வியில், எத்தனை வகை வாகனங்கள் படத்தில்தெரிகிறது என, கேட்கப்பட்டிருந்தது. படத்தில் கார், ஆட்டோ, மோட்டார் பைக் மற்றும் மொபட் வகை வாகனங்கள் இருந்தன.
மதிப்பெண் தர வேண்டும்:
விடையில், இருசக்கர வாகனத்தின் இரு வகைகளும் குறிப்பிட வேண்டுமா அல்லது அனைத்தை யும் ஒரே வகையாக குறிப்பிட வேண்டுமா என்ற குழப்பம் இருந்ததாகவும், இதில் எப்படி குறிப்பிட்டாலும் மதிப்பெண் தர வேண்டும் என்றும், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தேர்வில், 74 பேர் காப்பியடித்து பிடிபட்டனர். நான்கு பேர் மாணவர்; 70 பேர் தனித்தேர்வர்கள். அதிகபட்சமாக கடலூரில், 43 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.

Monday, March 9, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட உள்ள விடைத்தாள்களில் முகப்புத்தாள்கள் இணைக்கும் பணி தொடங்கியது.
இது குறித்து தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11827 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ மாணவியர் எழுத உள்ளனர். இதையடுத்து அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான விடைத்தாள்கள் 3298 தேர்வு மையங்கள் உள்ள மாவட் டங்களுக்கு தேர்வுத் துறை கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் விடைத்தாள்கள் தைக்கும் பணி தொடங்கியுள்ளது. விடைத்தாளின் முதன்மை விடைத்தாளில் தற்போது முகப்பு தாள் இணைக்கும் பணியை தொடங்க தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாளில் முகப்புத்தாள்கள் முதன்மை விடைத்தாளுடன் தைக்கும் பணியை 7ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும். முகப்பு தாள்களை முதன்மைத் தாளுடன் இணை த்து தைக்கும் போது அந்தந்த பாடத்துக்குரிய முதன்மை விடைத்தாளுடன் தைக்க வேண்டும். இதன்படி பத்தாம் வகுப்பு மொழித்தாள் என்று உள்ளவற்றில் மொழித்தாள் 1, ஆங்கிலம் 1, ஆங்கிலம் 2 ஆகிய முகப்புத்தாள்களை தைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் 2க்கு அதற்குரிய தமிழ் 2 முகப்பு தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற மொழிப்பாடங்களான இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு போன்றவற்றின் இரண்டாம் தாள் பாடத்துக்கு வரிசை எண் 1ல் காணும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட விடைத்தாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு கணக்கு, அறிவியல் பாடங்களில் கணக்கு பாடத்துக்கு கிராப் ஷீட்டை 28 மற்றும் 29ம் பக்கங்களுக்கு இடையே இணைத்து தைக்க வேண்டும்.
* முகப்புத் தாளில் மீடியம்(பாட வழி) தவறாக இருந்தால் சிவப்பு நிற மையால் திருத்தம் செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
* முகப்பு தாளில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் தவறாக இருந்தாலோ, பள்ளியின் பெயர் திருத்தம் இருந்தால் அவற்றை சிவப்பு மையால் திருத்தம் செய்து மேற்கண்ட படி ஒப்புதல் பெற வேண்டும்.
* தேர்வு மைய எண் மற்றும் பெயரில் திருத்தம் இருந்தாலோ, முகப்புத்தாளில் பார்கோடு உள்பட சேதம் அடைந்திருந்தாலோ, முகப்பு தாள் பெறப்படவில்லை என்றாலோ, பாடக் குறியீட்டு எண் மற்றும் பாடம் மாறி இருந்தால் தேர்வுத் துறை அறிவித்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்.uமாணவரின் போட்டோ முகப்பு தாளில் மாறியிருந்தால் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், உரிய பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் போட்டோவை ஒட்டி சான்றொப்பம் செய்ய வேண்டும், தனித் தேர்வராக இருந்தால் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரே மாணவரின் போட்டோவை ஒட்டி சான்றொப்பம் இட வேண்டும். - See more at: http://m.dinakaran.com/detail.asp…

Saturday, March 7, 2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்(தத்கல்) விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்வை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மார்ச் 7-ஆம் தேதி முதல் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம். மார்ச் 11-இல் செய்முறைத் தேர்வு: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு மார்ச் 11-ஆம் தேதியன்று அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் தாங்கள் ஏற்கெனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ஹால் டிக்கெட், செய்முறைத் தேர்வு குறித்து இந்தத் தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 5, 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டதுஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
தேர்வை சிறப்பான முறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வர்கள் ஆகியோர் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே விடைத்தாள் அனுப்பும் பணி முடிவடைந்துவிட்டது.
அதுபோல விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. முகப்பு சீட்டில் மாணவரின் தேர்வு எண், அவரது புகைப்படம், ரகசிய கோடு நம்பர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த முகப்பு சீட்டை தனியாக தேர்வுத்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பும் பணியில் உள்ளது. சில மாவட்டங்களுக்கு முகப்பு சீட்டு அனுப்பப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இவை தேர்வு மையங்களுக்கு போய்ச்சேர்ந்த பின்னர் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் நூலைக்கொண்டு விடைத்தாளின் முன் பக்கத்தில் வைத்து முகப்பு சீட்டை தைப்பார்கள்.
அதேபோலத்தான் வினாத்தாளும் அனுப்பப்படும். அவை முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பிலும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் காவலிலும் இருக்கும்.