Thursday, March 5, 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டதுஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.
தேர்வை சிறப்பான முறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வர்கள் ஆகியோர் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே விடைத்தாள் அனுப்பும் பணி முடிவடைந்துவிட்டது.
அதுபோல விடைத்தாளின் முகப்பு சீட்டு தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. முகப்பு சீட்டில் மாணவரின் தேர்வு எண், அவரது புகைப்படம், ரகசிய கோடு நம்பர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த முகப்பு சீட்டை தனியாக தேர்வுத்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பும் பணியில் உள்ளது. சில மாவட்டங்களுக்கு முகப்பு சீட்டு அனுப்பப்பட்டு விட்டது. மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இவை தேர்வு மையங்களுக்கு போய்ச்சேர்ந்த பின்னர் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் நூலைக்கொண்டு விடைத்தாளின் முன் பக்கத்தில் வைத்து முகப்பு சீட்டை தைப்பார்கள்.
அதேபோலத்தான் வினாத்தாளும் அனுப்பப்படும். அவை முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பிலும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் காவலிலும் இருக்கும்.

No comments:

Post a Comment