Wednesday, March 30, 2016

ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாகதேர்வெழுதிய மாணவ,மாணவியர் கவலையுடன் கூறினர்.

பத்தாம் வகுப்பு தேர்வுகடந்த,15ல் துவங்கியது. நேற்றுஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு,மாவட்டத்தில் உள்ள, 81 மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்த, 29 ஆயிரத்து, 664 பேரில், 29ஆயிரத்து, 111 பேர் தேர்வு எழுதினர். 854 தனித்தேர்வரில், 738 பேர் மட்டுமே எழுதினர்.
மாணவமாணவியர் கூறியதாவது:
ஒரு மதிப்பெண் வினா பகுதியில்வினாக்கள் கஷ்டமாக இருந்ததால் சரியாக பதில் எழுத முடியவில்லை. கடந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எதுவும் கேட்கப்படாமல்புதியதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதிஇவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஐந்து மதிப்பெண் வினா பகுதியிலும்புதிதாகபாடப்புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வினாக்கள்,அதிகமாக இருந்தன.
நேரடியான வினாக்களாக இல்லாமல்சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகளால்குழப்பம் ஏற்பட்டது. இதனால்சில வினாக்களுக்கு பதில் எழுத முடியவில்லை. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு சிக்கலாக அமையும் எனஎதிர்பார்க்கவே இல்லை.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment