Wednesday, December 21, 2016

பள்ளிகளில் செய்முறை பயிற்சி புறக்கணிப்பு!

அரசுப் பள்ளிகளில் செய்முறை வகுப்புக்கு, போதிய முக்கியத்துவம் தராததால், உயர்கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபின், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் வரை, செய்முறை பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பள்ளிகளில் நடக்கும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளிலும், செய்முறை பகுதிக்கான தேர்வு நடத்தி, மதிப்பெண் குறிப்பிட வேண்டியது அவசியம்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில், 25 மதிப்பெண்களும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு நடத்த வேண்டும்.

ஆனால், கோவையில் உள்ள பல அரசுப் பள்ளிகளில், பருவத்தேர்வு சமயங்களில், செய்முறை தேர்வு நடத்துவதில்லை. இதற்கு கோவையில் 44 அரசுப் பள்ளிகளில் ஆய்வக வசதி இல்லாதது காரணமாகக் கூறப்படுகிறது.

வகுப்பறையில் பாடம் நடத்தும் போது, செய்முறை பகுதிகளை ஆசிரியர்கள் விளக்குகின்றனர். ஆனால், ஆய்வக கட்டமைப்பு இல்லாததால், மாணவர்கள் பயிற்சி பெற அனுமதிப்பதில்லை. ஆய்வகம் இருந்தால் தான், அமில, காரங்களை கொண்டு பாதுகாப்பாகப் பயிற்சி பெற முடியும்.

இதுதவிர, தொண்டாமுத்துார், மதுக்கரை, ஒண்டிப்புதுார், சிங்காநல்லுார் உள்ளிட்ட, பல அரசுப்பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடமும், பல ஆண்டுகளாக நிரப்பாமல், காலியாக உள்ளது. ஆசிரியர்களுக்கான பணிச்சுமை அதிகரித்துள்ளதால், ரெக்கார்டு நோட்டுகளில் வரைந்து சமர்பிப்பதையே, செய்முறை பகுதிக்கான மதிப்பெண்களாக, குறிப்பிடுவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுத்தேர்வில், 80 சதவீத மாணவர்களுக்கு, செய்முறை விளக்கத்தை எழுதினாலே, 50க்கு 45 மதிப்பெண்கள் அளிக்கின்றனர். இதனால், பொதுத்தேர்வுக்கு எந்த பாதமும் இல்லை. ஆனால், உயர்கல்வியில் மாணவர்கள் பின்தங்குவதாக, கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறுகையில், ’இன்ஜி., மருத்துவப்படிப்புகளில் சேரும், 80 சதவீத மாணவர்களுக்கு, செய்முறை பகுதிகளுக்கான, அடிப்படை புரிதல் கூட இல்லை. கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்வோருக்கு, பிளஸ் 2 செய்முறை பகுதிகளை, முதலாமாண்டு வகுப்பில், மீண்டும் கையாள வேண்டியுள்ளது.

கல்லுாரி கல்வியில், செய்முறை பகுதி, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பள்ளிகளில் கருத்துரு பகுதியை மட்டும், மனப்பாடம் செய்வதால், உயர்கல்வியில் மாணவர்கள் பின்தங்குகின்றனர். 

எனவே, பள்ளிக்கல்வியிலே செய்முறை வகுப்புக்கு, போதுமான வசதிகள் ஏற்படுத்தி தருவதோடு, பயிற்சிக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.

1 comment:

  1. Casino City, NJ | MapYRO
    CasinoCity, NJ, United States. 0-9-0. 0-9. 0. 2-9. 0-9. 0-9. 0-9. 군포 출장마사지 0-9. 0-9. 0-9. 영천 출장샵 Map. 3-5-0. 0.1-0. 0.0-0. 0-9. 보령 출장안마 0-9. 0-9. 보령 출장마사지 0-9. 0-9. 0-9. 0-9. 0-9. 0-9. 0-9. 0-9. 0-9. 1-6-0. 0-9. 0.1-0. 0-9. 안성 출장마사지 0-9.

    ReplyDelete