Thursday, September 14, 2017

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு; ’ஹால் டிக்கெட்’

 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) செப்.,16ம் தேதி  முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்குச் சென்று SSLC SEPTEMBER/OCTOBER 2017 EXAMINATION – HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை “Click” செய்து, தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை   பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்விற்கான 25 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்க்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கட்டாயம் செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். 

அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்று, பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வருகைபுரியாதோர், நடைபெறவுள்ள துணைத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதுவதோடு அறிவியல்பாட கருத்தியல் தேர்வையும் எழுத வேண்டும். 

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே 18.09.2017, 19.09.2017 மற்றும் 20.09.2017 ஆகிய மூன்று நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என செய்தி குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment