Wednesday, May 17, 2017

19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

 பத்தம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே 19) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

08.03.2017 முதல் 30.03.2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை  www.tnresults.tn.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல்  மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 

25.05.2017 முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள்  பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, 19.05.2017 முதல் 22.05.2017 மாலை 5.45 மணி வரை, மாணவர்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் கட்டணம்

பகுதி – I மொழி - ரூ.305/-
பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/-
பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் - ரூ.205/-
பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/-

மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாக  செலுத்தி ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது என  அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment