Tuesday, February 2, 2016

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு

Monday, February 1, 2016

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Wednesday, January 27, 2016

'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டு


'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிகளில், தமிழ் மொழியை கட்டாயமாக்கி, 2006ல் சட்டம் இயற்றப்பட்டது.

Monday, January 25, 2016

பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sunday, January 24, 2016

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை!

தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில்அரசு பள்ளிகளில் படிக்கும்பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை எனபள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு

திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல்

திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Friday, January 22, 2016

10ம் வகுப்பு திருப்ப தேர்வுகள்: பிப்ரவரி 1ல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்பத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Thursday, January 14, 2016

10–ம் வகுப்பு மாணவர்கள் தமிழுக்கு பதில் தெலுங்கில்தேர்வு எழுத அனுமதிகேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின்படி முதல் பாடமாக தமிழில் தேர்வு எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத அனுமதிகேட்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கட்டாய சட்டம்தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006–ம் ஆண்டு கொண்டுவந்தது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அ, ஆ' தெரியவில்லை அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி

அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது

Monday, January 11, 2016

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும்.

Saturday, January 9, 2016

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் வியாழக்கிழமை முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டண

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து, ஜன., 20ம் தேதிக்குள் வசூலித்து செலுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, January 6, 2016

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tuesday, December 15, 2015

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?


வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார். இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக
பாதிப்பட்டுள்ளன. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. பலரது புத்தகங்கள் மழையில் நனைந்து, சிதைந்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரையாண்டு தேர்வை தமிழக அரசு நடத்தினால், அந்த மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த கல்வியாண்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்தக் கூடாது . நேரடியாக இறுதியாண்டு தேர்வை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர், வக்கீல் முகமது நசரூல்லா, இந்த மனுவின் அடிப்படையில் இந்த கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரித்து, அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த மனுவை வழக்காக பதிவு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள்


தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைதோறும் அரசுப் பள்ளிகள் செயல்படும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஓரிரு நாள்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Saturday, December 12, 2015

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, December 10, 2015

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு


நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
நடைமுறையிலுள்ள 10ம் வகுப்பு அறிவியல் பாட நூலின் 2015ம் கல்வியாண்டிற்கான திருத்திய பதிப்பில் பாடநூல் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசனையின்படி பாடநூல் தயாரிப்பு குழு அறிவியல் செய்முறை பயிற்சிகளை திருத்தியமைத்தது.
திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிக்கான பட்டியல் நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ் வழி அறிவியல் பாடநூல் செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 326, 345லும், ஆங்கில வழிக்கான செய்முறை பயிற்சிகள் பகுதி-1 மற்றும் 2ல் பக்க எண் 311, 332லும் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருத்தியமைக்கப்பட்ட செய்முறை பயிற்சிகளின்படி கற்பிக்கவும், இதனை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 18, 2015

மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.


அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கோவையில், 346 ஆசிரியர்கள் பங்ககேற்றனர். பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் தவிர்த்த பிற பாடங்களை கையாளும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக கற்பித்தல் முறை பயிற்சிகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இதில், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்கள், பங்கேற்றுள்ளனர். ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு புரியும் படி எளிமையாக கற்பித்தல் குறித்து கருத்தாளர்கள் நேற்று பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, இன்றும், நாளையும் பயிற்சிகள் நடக்கவுள்ளது. ஆங்கில பாடத்திற்கான பயிற்சிகளுக்கு மட்டும், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 3 கோடியே 67 லட்சத்து, 80 ஆயிரத்து, 800 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதே போல், அடுத்தடுத்த கட்டங்களாக கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறவுள்ளது; 14 ஆயிரத்து 530 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ள கணித பயிற்சி வகுப்புகளுக்கு, 3 கோடியே 67 லட்சம் ரூபாயும், 12 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ள சமூக அறிவியல் பாடத்திற்கு, 2 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரத்து 600 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், நான்கு மையங்களில் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நடந்தது. இதில், 396 ஆசிரியர் கள் பங்கேற்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கருத்தாளர்களாக பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமைவகித்து பயிற்சிகளை துவக்கி வைத் தார். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அலுவலர் முத்து மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

Wednesday, August 5, 2015

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சில தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு, உடனடி துணைத் தேர்வு நடத்தப்பட்டது.தற்போது, அனைத்து தேர்வு முடிவுகளும் வெளிவந்து, மேல்நிலை மற்றும் தொழிற்கல்விக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் மறு கூட்டல், மறு மதிப்பீடு, துணைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், திருத்தப்பட்ட அசல் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுத் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.